இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் நடத்திய போராட்டம், வெற்றியுடன் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். கோதுமைக்கு ஆதார விலை, அதிக மின் கட்டணம் தொடர்பாக போராடி வந்த நிலையில், தற்போது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அந்த வகையில் பஞ்சாப் விவசாயிகள், தங்கள் மாகாணத்தின் தலைநகரான லாகூரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த, அங்கு சென்ற போது தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத்தவிர பஞ்சாப் மாகாணத்தின் பல இடங்களிலும் விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத்தவிர போராட்டத்தில் முன்னிலை வகித்த விவசாயிகளின் பிள்ளைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே போராட்டத்தை முன்னின்று நடத்தும் விவசாய சங்கம், பஞ்சாப் தலைமை செயலாளரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு விவசாயிகளின் போராட்டம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.