2008ஆம் ஆண்டில் இந்தியாவும், பாகிஸ்தானும் தூதரக அணுகல் ஒப்பந்தம் போட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் இரு நாடுகளும் தூதரக் அணுகல் தொடர்பான பட்டியலை வெளியிடும். அந்த வகையில், இன்று இரு நாடுகளும் தங்களது வசம் இருக்கும் பொதுமக்கள், கைதிகள் மற்றும் மீனவர்களின் பட்டியலை பகிர்ந்துகொண்டன.
அதில் பாகிஸ்தான் வெளியிட்ட தகவலின்படி, பாகிஸ்தான் சிறையில் 271 மீனவர்களோடு, 49 இந்திய குடிமக்கள் கைதிகளாக அடைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. அதே போல், இந்திய சிறையில், 381 பாகிஸ்தான் குடிமக்கள் மற்றும் 81 மீனவர்கள் அடைக்கப்பட்டிருப்பதாக இந்தியா பட்டியலை வெளியிட்டுள்ளது.
அனைத்து சிவில் கைதிகள், மீனவர்கள், அவர்களின் படகுகள் மற்றும் காணாமல் போன இந்திய பாதுகாப்பு படையினர் ஆகியோரை முன்கூட்டியே விடுதலை செய்து திருப்பி அனுப்புமாறு இந்திய அரசு, பாகிஸ்தானிடம் வலியுறுத்தியுள்ளது.