வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவருடைய மகன் கதிர் ஆனந்த் எம்.பி வீட்டில் அமலாக்கத் துறையினர் நேற்று(3.1.2025) காலை 7 மணிக்கு வந்துள்ளனர். அப்போது கதிர் ஆனந்த வீட்டில் யாரும் இல்லாததால் வீட்டை சோதனை செய்ய முடியாமல் வெளியே காத்திருந்தனர்.
இந்த நிலையில் அமலாக்கத்துறையினர் கதிர் ஆனந்தை தொடர்புகொண்டு பேசினர். அதன்பிறகு கதிர் ஆனந்த், என்னைச் சார்ந்த இருவரை அனுப்புகிறேன்; அவர்களை வைத்து சோதனை செய்யுங்கள் என்று கூறியதால், மதியம் 2 மணியளவில் வீட்டை திறந்து உள்ள சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துரை முருகன் அறை பூட்டி இருந்த நிலையில் அதனை திறக்க முடியாமல் இருந்துள்ளது. இதனால் பூட்டை உடைக்க பணியாளர் ஒருவர் கடப்பாரை எடுத்து உள்ளே சென்றார் பிறகு உள்ளே சுவர் உடைக்கும் சத்தம் கேட்டது, அதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து சோதனை நடைபெற்று வந்தன. பிற்பகல் 2 மணிக்கு துவங்கிய சோதனை நள்ளிரவு 1.35 மணி வரை நடைபெற்றது. சோதனையில் கைப்பற்றிய ஆவணங்களைத் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினருடன் அதிகாரிகள் கொண்டு சென்றனர்.