கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபயா ராஜபக்சே உள்ளிட்டோரை கொல்ல முயற்சி செய்யப்பட்டதாக தொலைபேசி உரையாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியளித்தது. ‘ஊழலுக்கு எதிரான படை’ என்ற அமைப்பை சேர்ந்த நாமல் குமாரா என்பவர் இதை வெளியிட்டார். இந்த நிலையில், நாமல் குமாராவுடன் தொடர்புடைய தாமஸ் என்னும் இந்தியரை இந்த விவகாரத்திற்காக நேற்று முந்தினம் இலங்கையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு சென்று, நாமல் குமாராவின் வீட்டில் இருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
இதை தொடர்ந்து நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட தாமஸை காவலில் எடுத்து விசாரித்து, விசாரணை அறிக்கையை தக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தாமஸுக்கும் நாமல் குமாராவுக்கும் எவ்வகையில் தொடர்ப்பு என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் கைதுக்கு காரணமாக இருக்கும் அந்த தொலைபேசி உரையாடலின் உண்மை தன்மையையும் ஆராய உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.