Published on 20/11/2018 | Edited on 20/11/2018
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியம் பொருட்களுக்கு அமெரிக்கா 25 முதல் 10 சதவீதம் வரை இறக்குமதி வரி வசுல் செய்துவருகிறது. இது தொடர்பாக இந்தியா, அமெரிக்காவுக்கு எதிராக குழு அமைத்து வரி வசூலை ஒழுங்குபடுத்த உலக வர்த்தக அமைப்பிடம் (WTO) முறையிட்டிருக்கிறது.
இதுபோன்ற வர்த்தக பிரச்சனைகள் வரும்போது முதலில் இரு நாடுகளும் அவர்களுக்குள் பேசி பரஸ்பரம் செய்துகொள்ள முயற்சிகளை எடுக்க வேண்டும். அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தால் அதன்பின் உலக வர்த்தக அமைப்பிடம் முறையிட வேண்டும். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் தீர்வு எட்டப்படாத நிலையில்தான் இந்தியா, உலக வர்த்தக அமைப்பிடம் முறையிட்டிருக்கிறது. இதன் பின் உலக வர்த்தக அமைப்பு என்ன முடிவு தருகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.