தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சியளிக்கப்பட்டது உண்மைதான் என அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து கூறியுள்ள அவர், "1980களில், சோவியத் ரஷ்யா ஆப்கனிஸ்தானை ஆக்கிரமித்தது. எனவே ரஷ்யாவுக்கு எதிராக செயல்படுவதற்காக தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளித்தது. அமெரிக்காவின் உளவு அமைப்பான CIA தான் இதற்கான நிதி உதவியை அளித்தது. இப்படி அமெரிக்காவால் நிதியுதவி அளிக்கப்பட்டு பாகிஸ்தானில் வளர்க்கப்பட்ட தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக தற்போது அமெரிக்கா பேசுவது மிகப்பெரிய முரண்பாடாக உள்ளது. கடந்த காலங்களில் பாகிஸ்தான் நடுநிலை வகித்திருக்க வேண்டும். தீவிரவாதத்தால் பாகிஸ்தான் 70 ஆயிரம் பேரை இழந்துள்ளது. மேலும் 22 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி இழப்பை சந்தித்துள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளித்ததை ஒப்புக்கொள்ளாத பாகிஸ்தான், தற்போது ஒப்புக்கொண்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.