Published on 14/01/2019 | Edited on 14/01/2019

அடிக்கும் குளிரில் சில்லென்ற ஐஸ் தண்ணியில் குளிக்கும் சடங்கு ஒன்று ஜப்பானில் நடந்து முடிந்துள்ளது. புத்தாண்டு பிறந்ததையொட்டி அதன் ஒரு பகுதியாக பாரம்பரிய சடங்கான இது ஜப்பானில் நடத்தப்பட்டுள்ளது. ஜப்பானியர்களின் நம்பிக்கைப்படி ஒவ்வொரு புத்தாண்டு பிறந்த பின்னும் இவ்வாறு குளிர்ந்த நீரில் குளிப்பதால் அவர்கள் மனதில் உள்ள தீய எண்ணங்கள் விலகுவதாக நம்பப்படுகிறது. 2019 ஆம் ஆண்டுக்கான இந்த விழா நேற்று ஜப்பானில் நடைபெற்றது. இதில் வெள்ளை நிறத்தினாலான சிறிய கால்சட்டை அணிந்தபடி குளிர்ந்த ஐஸ் நீரில் அவர்கள் குளித்து, பிரார்த்தனையும் மேற்கொண்டனர்.