Skip to main content

100 டன் கடல்சார் உயிரினங்கள் உயிரிழப்பு..

Published on 18/08/2018 | Edited on 18/08/2018
florida

 

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் 100 டன் கடல்சார் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கி வருவது எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மீன்கள், சுறாக்கள், டால்பின்கள், ஆமைகள், நண்டுகள் போன்ற கடல்சார் உயிரினங்கள் ப்ளோரிடா மாகாணத்தில் சுவாச பிரச்சனைகளால் உயிரிழந்து வருகின்றன. கடலில் ரெட் டைட் என்று சொல்லப்படும் அலை உருவாகும் போது, கடலில் இருக்கும் குறிப்பிட்ட பாசிகள் நச்சுத்தன்மையை வெளியிடுகிறது. இதன்காரணமாக கடல்சார் உயிரினங்கள் உயிரிழக்கின்றன. இதனால் மாகாணத்தைச் சேர்ந்த ஏழு கவுண்டிகளுக்கு எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை சரி செய்ய 1.5 மில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கப்படுவதாக ப்ளோரிடா ஆளுநர் தெரிவித்துள்ளார்.      

     

சார்ந்த செய்திகள்

Next Story

அமெரிக்காவில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து; 99 பேர் நிலை குறித்து அச்சம்!

Published on 25/06/2021 | Edited on 25/06/2021

 

MIAMI BUILDING

 

அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தில், மியாமி கடற்கரை அருகே 12 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள்ளார். 102 பேர் கட்டிடத்தில் இருந்து தப்பித்துள்ளனர். அதேநேரத்தில் சுமார் 99 பேரின் நிலை என்ன ஆனது என்றே தெரியாத நிலை நீடித்து வருகிறது. 

 

இந்த 99 பேரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்பதால், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த 12 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு இதுவரை காரணம் என்னவென்று தெரியவில்லை. 

 

40 வருடங்களுக்கு ஒரு முறை,  புளோரிடா மகாண கட்டிடங்களின் கட்டமைப்பும், மின்சார வசதிகளும் பாதுகாப்பிற்காக மறு சீரமைப்பு செய்யப்பட்டு, பாதுகாப்பு சான்றிதழ் பெற வேண்டும். அதற்கான நடைமுறைகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த 12 மாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

பள்ளிக்குள் செல்.. காண்பவரை சுட்டுக்கொல்! - அதிர்ச்சியை ஏற்படுத்தும் வீடியோகேம்

Published on 29/05/2018 | Edited on 29/05/2018

பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு நடத்துவது மாதிரியான வீடியோகேம் வெளியாகியுள்ள நிலையில், பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

video

 

அமெரிக்காவில் தொடர்ச்சியாக பள்ளிகள் மற்றும் நிறுவனங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இந்தத் தாக்குதல்களில் சிக்கிய பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்துவரும் சூழலில், துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதில் சட்டத்திருத்தம் வேண்டும் என லட்சக்கணக்கான மாணவர்கள் அதிபர் ட்ரம்ப்பிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

 

இந்நிலையில், பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்துவது மாதிரியான வீடியோ கேம் ஒன்று விரைவில் வெளியாகவுள்ளது. வால்வ் என்ற நிறுவனம் வரும் ஜூன் 6ஆம் தேதி வெளியிட இருக்கும் இந்த வீடியோ கேமிற்கு, ஆக்டிவ் ஷூட்டர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கேமை விளையாடுபர் ஸ்வாட் அதிகாரியாக செயலாற்றி காக்கவேண்டும். அல்லது கொலைகாரனாக மாறி வேட்டையாட வேண்டும். 

 

விலை நிர்ணயம், விளம்பரம், விநியோகம் என பரபரத்துக் கொண்டிருக்கும் இந்த வீடியோ கேமை ரிலீஸ் செய்ய பொதுமக்கள், அரசியல்வாதிகள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வால்வ் நிறுவனம் பல விளக்கங்கள் தந்தும் மக்களின் கோபம் குறையவில்லை. இதற்கு முன்னர் இதுபோன்ற பல வீடியோ கேம்கள் பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.