இஸ்ரேலில் வாழ்ந்து வரும் மியா அவ்லாளோ என்ற 5 வயது சிறுமியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 50 ஆயிரம் பேர் தொடர்ந்து வருகின்றனர் காரணம் அந்த சிறுமியின் சிகை அலங்காரமும் அவருடைய பூனை கண்ணும்தான்.
தன்னுடைய சிறுவயதிலேயே மாடலிங் செய்து தனது புகைப்படங்களை வெளியிட்டு பிரபலம் அடைந்திருக்கிறாரார் சிறுமி மியா. ஆனால் அதற்கு காரணம் அவர் மட்டும்மல்ல இஸ்ரேலை சேர்ந்த பிரபல சிகை அலங்கார ஒப்பனையாளர் சகி தஹரி என்பவரும்தான். சகி தஹரி கூறுகையில், நான் அவளுக்கு சிகை அலங்கரம் செய்து அவளது புகைப்படங்களை வெளியிட்டேன். மியாக்கு சிகை அலங்காரம் செய்து எளிமையானது காரணம் அவர் எவ்வளவு நேரம் ஆனாலும் பொறுமையுடன் அமர்ந்திருப்பார். நான் எப்போதுமே அவளை ''இளவரசி மியா'' என்றுதான் செல்லமாக அழைப்பேன் எனக்கூறியுள்ளார்.
மியாவின் பெண் ரசிகர்கள் எங்களுக்கு இதுபோல் சிகை இல்லையே என வருத்தப்படுவதாகவும் பொறாமைப்படுவதாகவும் ஆனால் அவளது சிகை அலங்காரம் மற்றும் கண்களுக்கு நாங்கள் ரசிகர்கள் என்றும் ஆதரவு விமர்சனங்களை குவித்து வருகின்றனர். அதேபோல் சிறுவர் சிறுமிகளை தங்களது விருப்பம்போல் விளையாட விடவேண்டும் சிறுவயதிலேயே இப்படியா? மாடலிங் செய்ய பணிப்பது என எதிர்கருத்துக்களும் குவிந்து வருகிறது சிறுமி மியாவுக்கு.