ஹார்வி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3000 கி.மீ தொலைவில் இருந்து லாரியில் வந்து உணவு வழங்கிய பெண்!
ஹார்வி புயல் அமெரிக்காவையே புரட்டிப் போட்டது. பெரும் பொருளாதார சேதத்தில் அமெரிக்க மக்கள் உள்ளனர். சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. தன்னார்வலர்களின் முயற்சியோடு மீட்பு பணி சீரமைப்பு நடத்து வரும் நிலையில் பலரும் உதவிகள் செய்து வருகின்றனர். இந்த புணரமைப்பு பணிகளில் பாரதி கலை மன்றம் மற்றும் எம்பசிஸ் கார்ப்பரேசன் ஆகிய அமைப்புகள் இணைந்து ஹூஸ்டன் நகர மக்களுக்கு தீவிரமாக உதவி வருகிறது.
புயலால் பாதிக்கப்பட்டு பொருள்களை இழந்துள்ள மக்களுக்கு உதவிகள் செய்ய பிற மாநில மக்கள் பலர் ஆர்வம் காட்டியுள்ளனர். அரசு உதவிகளைவிட தன்னார்வலர்களின் உதவிகளே மிக அதிகமாக உள்ளது. திருமதி.ஷேனன் என்ற பெண் நியூ ஹாம்ஸ்பியர் நகரில் இருந்து ஒரு லாரி நிறைய துணிகள், உணவு, தண்ணீர், மருந்து, போன்ற பொருட்களை ஏற்றிக் கொண்டு 3000 கி.மீ தூரம் லாரியை தானே ஓட்டிக் கொண்டு வந்து பயலால் பாதிக்கப்பட்ட ஹூஸ்டன் நகரத்திற்கு வந்தார்.
ஹூஸ்டன் தமிழ் நண்பர்கள் குழு மற்றும் எம்பசிஸ் கார்ப்பரேசன் தன்னார்வ தொண்டர்கள் புயலால் பாதிக்கப்பட்ட கம்போடியா காலனி மக்களுக்கு வேறு ஒரு லாரி மூலம் 500 கி்மீ தூரம் கொண்டுசென்று வழங்கினார்கள். இத்துடன் பாரதி கலை மன்றம் குடிதண்ணீர் கேன்களையும் வழங்கினார்கள். லாரியை இலவசமாக உதவிய மற்றொரு தமிழருக்கு நன்றி தெரிவித்தனர். அமெரிக்க பாதிப்பு பகுதிகளில் இந்தியர்கள், தமிழர்கள் தங்கள் வேலைகளை மறந்து மீட்பு மற்றும் சீரமைப்பு, உணவு வழங்குவதை பார்த்த மக்கள் மனிதாபிமானத்தை பாராட்டுகிறார்கள்.
- இரா.பகத்சிங்