சமூக வலைத்தளங்கள் மூலம் செய்திகள் எந்த அளவுக்கு நமக்கு வேகமாக கிடைக்கிறதோ, அதை விட அதிகமாக போலி செய்திகள் பரவி வருகிறது. உலகில் நாளுக்கு நாள் ஒரு பக்கம் தொழில் நுட்பங்கள் வளர்ந்தாலும், அதன் தொடர்ச்சியாக தீய மற்றும் தேவையற்ற தொழில் நுட்பங்கள் வளர்ந்து வருவதால், வருங்கால இளைய சமுதாயத்தின் எதிர்காலம் கேள்வி குறியாகவுள்ளது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் "கூகுள் பிளே ஸ்டோரில்" இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலி "மொபைல் செயலிகளை" நீக்கியதாக அறிவித்துள்ளது.
இந்த செயலிகள் அனைத்தையும் நீக்க மக்கள் கூகுள் பிளே ஸ்டோரில் கருத்து தெரிவித்ததாகவும், அதன் அடிப்படையிலே நீக்கப்பட்டதாக கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. இதன் மூலம் ஆக்கப்பூர்வ செயலிகளை மக்கள் டவுன்லோடு செய்து பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. நீக்கப்பட்ட மொபைல் செயலிகளில் பெரும்பாலும் உண்மையான செயலிகள் போல் இருந்ததாகவும், தேவையற்ற விளையாட்டு செயலிகள் (GAME APPS), வீடியோ செயலிகள் (VIDEO APPS) உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செயலிகள் நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.