முதலில் ஆண்ட்ராய்டு மூலமாக அறிமுகமாகிய ஷாசம் (Shazam) ஆப், நம் மனதுக்கு பிடித்தமான பாடல், படம் என ஏதாவது ஒன்றின் பெயர் நமக்கு தெரியவில்லை என்றால், அதன் ஐந்து நொடி இசையை மட்டும் அதில் ஓடவிட்டால் போதும் அது எந்தப் படம், யார் அந்தப் பாடலை பாடியது என்று அது சம்பந்தமான அனைத்து விவரங்களையும் நமக்கு கொடுத்துவிடும். இந்த ஆப் ஆண்ட்ராயிட் மூலமாக அறிமுகம் செய்யப்பட்டாலும், அப்போதே இது ஆப்பிள் ஐ.ஓ.எஸ். ஃபோனங்களிலும் இந்த ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து உபயோகிக்கும் வசதி இருந்தது. ஆனால் இன்று இந்த ஆப்-ஐ முழுதாக ஆப்பிள் நிறுவனம் வாங்கிவிட்டது.
2014-ஆம் ஆண்டு கணக்கின்படி இந்த ஆப் ஒரு மாதத்திற்கு 100 மில்லியன் பயன்பாட்டாளர்கள் இருந்துள்ளனர். அதன் பிறகு 2017-ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் இந்த ஆப்-ஐ 400 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கப்போவதாக அறிவித்திருந்தது. பின் சில ஒப்புதல்களை எல்லாம் பெற வேண்டியிருந்ததால் கொஞ்சம் காலம் தாழ்த்தி 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி, தான் குறிப்பிட்ட தொகைக்கே (400 மில்லியன் அமெரிக்க டாலர்) வாங்கியுள்ளது. இதுகுறித்து ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீட்டில் 'இதுவரை உலக அளவில் 1 பில்லியன் முறை இந்த ஆப் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு நாளில் மட்டும் 20 மில்லியன் முறை இந்த ஆப்-ஐ மக்கள் உபயோகப் படுத்துகிறார்கள் என்றும் தெரிவித்தது.
இதுவரை இந்த ஆப்-ஐ உபயோகம் செய்யும்போது இடையில் விளம்பரங்கள் வந்து தொந்தரவு செய்யும். ஆனால், இனி அதுபோன்று விளம்பரங்கள் வராது என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.