பிரான்ஸ் நாட்டில் அணில் அம்பானி பதிவு செய்திருந்த நிறுவனத்திற்கு சுமார் 1125 கோடி ரூபாய் அளவுள்ள வரியை தள்ளுபடி செய்வதாக ரஃபேல் ஒப்பந்தம் முடிந்த 6 மாதத்தில் அந்நாட்டு அரசு அறிவித்ததாக பிரான்ஸ் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
பிரான்ஸில் அணில் அம்பானிக்கு சொந்தமான "ரிலையன்ஸ் அட்லாண்டிக் பிளாக் பிரான்ஸ்" என்ற நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 2007 முதல் 2010 முதல் 60 மில்லியன் யூரோ வரியாக கட்ட வேண்டும் என பிரான்ஸ் அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து 2010 முதல் 2012 ஆம் ஆண்டுகளில் 91 மில்லியன் யூரோ வரி விதிக்கப்பட்டது.
மொத்தமாக 2014 வரை இந்திய மதிப்பில் சுமார் 1182 கோடி ரூபாய் அணில் அம்பானி பிரான்ஸ் அரசுக்கு வரி செலுத்த வேண்டியிருந்திருக்கிறது. இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிலிருந்து 36 ரஃபேல் விமானங்கள் வாங்கபடும் என பிரதமர் மோடி அறிவித்தார். அதன் பின் ரஃபேல் விமானங்களை தயாரிக்கும் டஸால்ட் நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தத்தில் அணில் அம்பானி இணைந்த பிறகு ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெயரில் இருந்த 1182 கோடிரூபாய் வரியில் சுமார் 1125 கோடி ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்படுவதாக, பிரான்ஸ் அரசு அறிவித்ததாக ஊடகங்களில் வெளியான அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் கடனில் சிக்கி திவால் என அறிவிக்கப்பட்டது. மேலும் விமான உற்பத்தியில் முன் அனுபவமே இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது சர்ச்சை ஆனது. இந்நிலையில் ரஃபேல் விமான பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு 6 மாதத்திற்குள் அணில் அம்பானியின் 1125 கோடி ரூபாய் அளவு வரி தள்ளுபடி செய்யப்பட்டது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.