சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை இந்தியா பெற்றுள்ளது.
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்திற்கு எதிராக உலக நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் இந்திய அரசும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சுவிஸ் வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் குறித்த விவரங்களை பெற சுவிஸ் அரசுடன் பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தது. அதன் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் தற்போது இந்த பட்டியல் வழக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
AEOI கட்டமைப்பின் கீழ் இந்தியா, சுவிஸ் அதிகாரிகளிடமிருந்து விவரங்களைப் பெறுவது இதுவே முதல் முறையாகும். இதன்படி தற்போது செயலில் உள்ள வங்கிக்கணக்குகள், 2018 ஆம் ஆண்டில் மூடப்பட்ட கணக்குகள் குறித்த விவரங்கள் இந்தியாவுக்கு கிடைக்கப்பெற்ற உள்ளது. தற்போது இந்தியா பெற்றுள்ள இந்த பட்டியலில் 100 பேரின் கணக்கு விவரங்களை சுவிஸ் வருமான வரித்துறை அளித்துள்ளது. இதில் பெரும்பாலும் மோட்டார் வாகன உதிரிபாகங்கள், ரசாயனங்கள், ஜவுளி, ரியல் எஸ்டேட், வைரம், நகை மற்றும் எக்கு பொருட்கள் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களே அதிகம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.