இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தின் பலனாக ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். ஒட்டுமொத்த இலங்கையும் கலவரக் காடாக காட்சியளிக்கும் நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே கடந்த 12 ஆம் தேதி பதவியேற்றார்.
இந்நிலையில் விரைவில் இலங்கை அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் மீளும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்த ரணில் அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பிரதமராக பொறுப்பேற்றுள்ள அவர் பிரதமர் தங்கும் அரசு குடியிருப்புக்கு இதுவரை அவர் செல்லவில்லை. செலவுகளை குறைக்கும் பொறுப்பு தனக்கு உள்ளதாக கூறிய அவர், அலரி மாளிகையில் தான் தங்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார். இதனை அனைத்து அமைச்சர்களும் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது.