பாகிஸ்தானில் அமைதிக்கான நோபல்பரிசு பெற்றவர் மலாலா. அவர் தனது பள்ளி பருவத்தின்போது பள்ளி வாகனத்திலேயே தாலிபன் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். பெண்கள் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்ததால் அவர் சுடப்பட்டார் என தகவல்கள் பரவி அப்போதே பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த துப்பாக்கி சூட்டினால் தன் தலைப்பகுதியில் பலத்த காயம் அடைத்த மலாலா சிகிச்சைக்கு பின் நலமாகினார்.
மலாலா மீதான துப்பாக்கி சூட்டை நடத்திய பாசுல்லா எனும் தாலிபன் தீவிரவாதி ஆளில்லா விமானதாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால் பாசுல்லா ஏற்கனவே கொல்லப்பட்டான் என செய்திகள் பலமுறை வந்தன. இந்நிலையில் அவனது மரணத்தில் குழப்பம் நீடித்து வருகிறது.
பாகிஸ்தானில் தனியார் வானொலி ஒன்றில் நீண்ட உரைகள் நிகழத்தி முல்லா ரேடியோ என புகழ்பெற்றவன் பாசுல்லா. அண்மையில் கடந்த ஜூன் 13-ஆம் தேதி ஆப்கான் எல்லையில் குனர் மாகாணத்தில் நடந்த ஆளில்லா விமானத்தாக்குதலில் பாசுல்லா குறிவைத்து கொல்லப்பட்டான் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.