அமெரிக்கா மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்டுவதற்கு நிதி வழங்க எதிர்க்கட்சிகள் சம்மதிக்காததால் அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கு ஷட்டவுன் நிலையை பிரகடனடுத்தினார். இதனால் அமெரிக்க அரசு துறைகள் அனைத்தும் முடங்கின. இந்நிலையில் 35 நாட்கள் நீடித்த ஷட்டவுனுக்கு பின் இடைக்கால நிதியை ஒதுக்கி டிரம்ப் கடந்த வாரம் உத்தரவிட்டார். இந்நிலையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப்பின் மகன் எரிக் டிரம்ப், 'தந்தை இந்த பிரச்சனையில் அவரசரை நிலையை பிரகடனப்படுத்த வேண்டும் என நான் அவரிடம் கூறினேன். மக்கள் அனைவரும் எல்லை பகுதியில் சுவர் அமைப்பதற்கான திட்டத்தை ஆதரிக்கின்றனர். எனவே மக்கள் விருப்பத்தை எதிர்க்கட்சிகள் அலட்சியம் செய்கின்ற நிலையில் அவசரநிலையை பிரகடனப்படுத்தினால் தவறு இல்லை என கூறினேன். ஆனால் எனது தந்தை அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இனியும் எதிர்க்கட்சிகள் சம்மதிக்கவில்லை என்றால் வரும் பிப்ரவரி 15 முதல் மீண்டும் ஷட்டவுன் அறிவிக்கப்படும்' என கூறினார்.