ட
உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று நோய்க்கு ஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசி மக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. ஏற்கனவே பைசர் தடுப்பூசிக்கு அனுமதியளித்துள்ள அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள், இரண்டாவததாக மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதியளித்துள்ளன.
இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு உள்ள தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவும் இணைந்து ஒரு தடுப்பூசியை தயாரித்துள்ளன. குறைந்த விலையில், பாதுகாக்க எளிதான வகையில் உருவாகியுள்ள இந்த தடுப்பூசிக்கு, அனுமதி கோரி இங்கிலாந்து நாட்டின் சுகாதார கட்டுப்பாட்டாளரிடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. .
இந்தநிலையில், இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு/அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே, இந்தியாவில் இந்த தடுப்பூசிக்கு அனுமதிகோரி விண்ணப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது இங்கிலாந்து நாடு அனுமதி வழங்கியுள்ளதால், அதனைத் தொடர்ந்து இந்தியாவும் ஆக்ஸ்போர்டு/அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய தடுப்பூசி, புதிய வகை கரோனாவிற்கு எதிராகவும் செயல்படும் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.