அமெரிக்காவைச் சேர்ந்த இருவர் தானியங்கி காரான டெஸ்லாவில் பயணம் செய்துகொண்டிருக்கும் போது தூங்கிக்கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
எலக்ட்ரிக் கார் தயாரிப்பதில் சிறந்து விளங்கும் நிறுவனமான டெஸ்லா, தனது வாகனங்களில் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கு பெயர் போனது. அந்த வகையில் அந்த நிறுவனத்தின் புதிய அறிமுகம், தானியங்கி கார்கள். டெஸ்லாவின் இந்த தானியங்கி காரில் 50 முதல் 60கிமீ வேகத்தில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநர் இருக்கையில் இருப்பவரும், அருகில் இருப்பவரும் அசந்து தூங்கிக்கொண்டு சென்றுள்ளனர்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள டெஸ்லா நிறுவனம், ''டெஸ்லா கார் தானியங்கி வகை. தானாகவே இயக்கும் திறன் கொண்டது. ஆனாலும் ஓட்டுநர்கள் முழு கவனமுடன் இருக்க வேண்டும். தானியங்கி என்பதால் அசந்து தூங்கும் அளவுக்கு காரை பாதுகாப்பாக நினைக்கக்கூடாது'' என டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.
?? A driver of a Tesla on a Massachusetts highway was filmed with his head bowed and motionless, seemingly asleep while the 'Autopilot' system was in use. pic.twitter.com/kT9dTCoRC4
— Ahval (@ahval_en) September 10, 2019