Published on 09/07/2022 | Edited on 09/07/2022

உலகின் பிரபலமான சமூக ஊடகமான ட்விட்டரை, நம்பர் ஒன் கோடீஸ்வரரான எலான் மஸ்க் கடந்த மே மாதம் வாங்குவதற்காக 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்தார். அதனைத் தொடர்ந்து இன்னும் ஆறு மாதங்களில் ட்விட்டரின் முழு கட்டுப்பாடும் எலான் மஸ்க் வசம் வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம், எலான் மஸ்க் ட்விட்டர் வாங்குவது தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன.
இந்த நிலையில் திடீரென எலான் மஸ்க் ட்விட்டருடனான தனது ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். இதற்கு அவர், போலி கணக்குகள் மற்றும் ஸ்பேம் குறித்த முழுமையான கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் அளிக்கத் தவறினால் ட்விட்டரை வாங்கும் முடிவை கைவிடுகிறேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.