Published on 22/04/2019 | Edited on 22/04/2019
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.

ரிக்டர் அளவுகோலில் 6.3 அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல உயரமான கட்டிடங்கள் குலுங்கின. மேலும் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 5 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்ந்த கட்டிடங்கள் நிலநடுக்கத்தால் ஆடியதால் மக்கள் அலறியடித்து கொண்டு வெளியேறினர்.