ஆங்கில மொழியை கற்றுக்கொள்வதற்காக கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சீனர்கள் ரூ.31,000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
138 கோடி மக்கள் தொகை உள்ள சீனாவில் உலகின் பழமையான மொழியும், ஆங்கிலத்திற்கு பின் அதிகம் பேசப்படும் மொழியுமான மாண்ட்ரின் மொழி தான் தாய்மொழியாக உள்ளது. ஆனாலும் தொழில் காரணங்களுக்காக ஆங்கிலத்தின் தேவை அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டில் உள்ளவர்கள் ஆங்கிலம் கற்பதற்கு அதிகளவிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1979 ஆம் ஆண்டுக்கு பிறகே சீனாவில் ஆங்கிலம் கற்க வழிவகை செய்யப்பட்டது. அதன்பின் ஆங்கிலம் கற்போரின் எண்ணிக்கையும் அங்கு அதிக அளவில் உயர ஆரம்பித்தது. பெரும்பாலான மக்கள் தனியாக சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்து, அதன்மூலம் ஆங்கிலம் கற்று வருகின்றனர். அந்தவகையில் இந்த சிறப்பு வகுப்புகளுக்காக கடந்த 2018 ஆம் ஆண்டில் மட்டும் சீனர்கள் 31 ஆயிரத்து 908 கோடி ரூபாயை செலவு செய்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. 40 கோடி பேர் தனி மற்றும் சிறப்பு வகுப்பு மூலம் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளும் சீனாவில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் கற்க செய்யப்படும் செலவு தொடர்ந்து அதிகரிக்கும் என்றே தெரிவைக்கப்பட்டுள்ளது.