Published on 21/03/2023 | Edited on 21/03/2023

இந்தியா, துர்க்மினிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்தியாவில் டெல்லி மற்றும் வட மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நிலநடுக்கம் உணரப்பட்டதையடுத்து வீடுகளிலிருந்து மக்கள் வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீனா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் மையம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் கலாப்கான் என்ற இடத்தில் 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதேபோல் ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவாகியுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.