Published on 01/04/2019 | Edited on 01/04/2019
அந்தமான் நிக்கோபார் பகுதியில் இன்று காலை முதல் அடுத்தடுத்து 9 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. அனைத்து நில அதிர்வுகளும் 4.7 முதல் 5.2 வரை ரிக்டர் அளவுகளில் பதிவானது.
இன்று காலை இரண்டு மணி நேரத்திற்குள் இந்த 9 அதிர்வுகள் உணரப்பட்டதால் அங்குள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர். காலை 5.14 க்கு ஏற்பட்ட முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 என பதிவானது. காலை 6.54 க்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 5.5 என ரிக்டர் அளவுகோலில் பதிவு செய்யப்பட்டது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தொடர் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம் எனினும் 2 மணி நேரத்தில் 9 முறை நில அதிர்வு உணரப்பட்டது அங்கு பரபரப்பான சூழலை உருவாகியுள்ளது.