Published on 25/11/2019 | Edited on 26/11/2019
கென்யாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டிவருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த சனிக்கிழமை அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஓரிடத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் அந்தவழியாக சென்றுகொண்டிருந்த கார் அடித்துச் செல்லப்பட்டு ஆற்றில் தள்ளப்பட்டது. அதில் பயணித்த ஐந்து பேரும் இறந்துள்ளனர்.
மேலும் 55 பேர் நிலச்சரிவுகளில் பலியாகியுள்ளனர். இவர்களில் ஏழு குழந்தைகளும் அடங்குவர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். மேற்கு போகோட் ஆளுநர் ஜான் க்ரோப் அல் ஜெஸீரா செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்தபோது, "இதுபோன்ற பேரிடரை இதற்கு முன் நாங்கள் எதிர்கொண்டதே இல்லை" எனக் கூறியிருக்கிறார்.