குழந்தை பேறு என்பது இப்போதெல்லாம் அவ்வளவு எளிதானதாக இருப்பதில்லை. உணவு முறைகளாலும், உடல் பழக்க வழக்கங்களினாலும் கருவுரும் தாய்மார்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக திருமணமான இளம் வயது பெண்கள் முதல் ஐம்பது வயதை தாண்டியவர்களும் மருத்துவமனை சிகிச்சைக்காக தவம் இருப்பதை எல்லா ஊர்களிலும் காணமுடியும் ஒரே ஒரு குழந்தை பிறந்தால் போதும் என பல ஆண்டு ஏங்கும் தம்பதிகளும் இருக்கிறார்கள்.
ஆனால் இயற்கையின் அதிசயமாக ஒரே பிரசவத்தில் இரு குழந்தைகள், மூன்று குழந்தைகள், ஏன் ஆச்சரியப்படும் விதத்தில் நான்கு குழந்தைகளும் பிறந்து பெற்றோர்களுக்கு பூரண மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று ஒரு கர்பிணி தாய்க்கு ஐந்து குழந்தைகள் பிறந்து அதிசியத்தையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இது இங்கல்ல அருகே உள்ள இலங்கையில், கொழும்பு சொய்சா மகளிர் மருத்துவமனையில் இன்று வெள்ளிக்கிழமையன்று ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளதாக அந்த மருத்துவமனை கண்கானிப்பாளர் புஷ்பா கம்லத்கே கூறியிருக்கிறார், இவ்வாறு பிறந்த அந்த ஐந்து குழந்தைகளுமே பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கம்பஹா - பெபிலியாவல பகுதியைச் சேர்ந்த 29 வயதான கர்பிணி தாய் தனது முதல் பிரசவத்திலேயே இந்த ஐந்து பெண்குழந்தைகளும் பெற்றெடுத்துள்ளார். ஐந்து குழந்தைகளுமே நல்ல உடல் ஆரோக்கித்துடன் உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதில் பிறந்த ஐந்து குழந்தைகளில் ஒரு குழந்தையின் எடை மட்டும் சற்று குறைவாக உள்ளதுடன் அக்குழந்தையின் எடை ஒரு கிலோவாகவும் உள்ளது என்றும் மருத்துவமனை பிரதி கண்காணிப்பாளர் தெரிவித்திருக்கிறார். மற்ற குழந்தைகளின் எடை 1 கிலா 4 கிராமிற்கும், 1 கிலோ 8 கிராமிற்கும் இடைப்பட்டதாக இருக்கிறது.
இலங்கையில் சில ஆண்டுக் கணக்கில் இது நான்காவது முறையாக இவ்வாறு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து குழந்தைகளையும் ஆரோக்கியத்துடன் வளர்த்துவது என்பது பெற்றோர்களால் மிகவும் சிரமம் என்பதால் அரசு சிறப்பு உதவிகள் செய்ய வேண்டும் எனவும் சமூக நல ஆர்வலர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.