Published on 19/03/2020 | Edited on 19/03/2020
தங்களது தாயகமான இந்தியா திரும்ப பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா விமான நிலையத்தில் இரண்டு நாட்களாக இந்தியாவை சேரந்த 80 மருத்துவ மாணவர்கள் காத்திருக்கின்றனர்.
பிலிப்பைன்ஸ் அரசு இவர்களுக்கான விசா மற்றும் பாஸ்போர்ட்டை கொடுத்து அனுப்பி விட்டது. மணிலா விமான நிலையம் வந்த இந்த 80 பேருக்கும் இந்தியா செல்ல விமானம் இல்லை என அந்நாட்டு விமான போக்குவரத்து துறை அறிவித்துவிட்டது. இந்நிலையில் இன்று மாலையுடன் அந்த விமான நிலையம் மூடப்படுவதாக பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது.
தங்களை இந்தியா அழைத்து வர இந்திய வெளியுறவுத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையுடன் அந்த மாணவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.