210-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா தொற்று இருந்து வருகின்றது. இந்தியாவில் அதன் பாதிப்பு மிக அதிக அளவு காணப்படுகின்றது. பல்வேறு மாநிலங்களில் லட்சங்களை தாண்டி கரோனா பாதிப்பு சென்று கொண்டிருக்கின்றது.
உலக அளவில் இந்தியா, கரோனா பாதிப்பில் மூன்றாம் இடத்தில் இருந்து வருகின்றது. முதல் இரண்டு இடங்களில் அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் இருக்கின்றன. உலகம் முழுவதும் இதுவரை கரோனா காரணமாக 1,18,18,564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவிலும் இதன் பாதிப்பு அதிக அளவில் இருந்து வருகின்றது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,368 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 6,94,230 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றில் இருந்து 4,63,880 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையில் ரஷ்யா நான்காவது இடத்தில் இருக்கின்றது. இந்தியா மூன்றாவது இடத்திலும், பிரேசில், அமெரிக்கா இரண்டாவது மற்றும் முதல் இடத்திலும் இருந்து வருகின்றது.