Skip to main content
Breaking News
Breaking

லத்தின் அமெரிக்க நாடுகளில் கரோனா பலி எண்ணிக்கை உச்சத்தை தொட்டது...

Published on 21/08/2020 | Edited on 21/08/2020

 

corona death

 

லத்தின் அமெரிக்க நாடுகளில் கரோனா பலி எண்ணிக்கை 2.5 லட்சத்தைத் தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

 

இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டாலும் நோய்த் தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இவ்வைரசுக்கு எதிரான பல தடுப்பூசி ஆய்வுகள் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டன என்பது சற்று ஆறுதலைத் தந்தாலும், அதிகரிக்கும் பலி எண்ணிக்கையும், வைரஸின் உருமாற்றம் குறித்த தகவல்களும் மக்களைப் பெரிதும் அச்சப்படுத்துகிறது. இந்நிலையில் லத்தின் அமெரிக்க நாடுகளில் இருந்து வரும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை விவரங்கள் பெரும் கலக்கத்தை உண்டு பண்ணுகிறது

 

கொலம்பியா, பிரேசில், பெரு ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பலி எண்ணிக்கை மொத்தமாக 2.5 லட்சத்தைக் கடந்துவிட்டது. இதில் பிரேசிலில் மட்டும் 1.12 லட்சம் பேர் வரை பலியாகி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் பிரேசில் இரண்டாம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்