சட்டவிரோத குடியேற்ற கொள்கையை எதிர்த்து குரல்கொடுக்கும் ட்ரம்ப் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவரது மாமியார் மற்றும் மாமனாருக்கு அமெரிக்க குடியுரிமை வாங்கி தந்ததாக குற்றசாட்டுகள் எழுந்துவருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மனைவியின் பெற்றோர்கள் விக்டர்-அமலிஜா னவ்ஸ். . இவர்கள் சுலோவேனியா நாட்டை சேந்தவர்கள். 70 வயதான அவர்கள் செவ்னிகா நகரில் வசித்து வருகின்றனர். விக்டர் கார் விற்பனையும் அமலிஜா ஜவுளி துறையிலும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அமெரிக்காவில் க்ரீன் கார்டு எடுக்கப்பட்ட ஐந்து வருடத்திற்கு பிறகுதான் அமெரிக்க குடியுரிமைக்கே விண்ணப்பிக்க முடியும் என விதி இருக்கும்பொழுது அண்மையில் கிரீன் கார்டு பெற்ற அவர்கள் எப்படி அமெரிக்க குடியுரிமையை பெற்றிருக்கமுடியும் இது அதிபரின் அதிகாரத்தால் நடந்த ஒன்று என குற்றசாட்டுகள் குவிந்து வருகிறது. சட்டவிரோத குடியேற்றத்தை எதிர்க்கும் ட்ரம்ப் செய்த இந்த செயலால் அங்கு ட்ரம்ப்பிற்கு எதிராக கண்டனங்கள் வலுத்துவருகிறது.