Published on 05/08/2018 | Edited on 05/08/2018

வடமேற்கு பாகிஸ்தானில் பேருந்து மீது லாரி மோதி 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடமேற்கு பாகிஸ்தானில் புனர் நகரிலிருந்து காரச்சி பேருந்து நிலையத்திற்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கைபர் பக்துன்குவாவில் சமரி பகுதியில் சென்றுகொண்டிருந்த பொழுது எதிரே வந்த லாரி மோதியதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் .உயிரழிந்தவர்களில் இரண்டுபேர் பெண்கள் இரண்டு குழந்தைகள்.
இந்த விபத்தில் 35 மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக முதல்கட்ட தகவல்கள் தெரியவந்துள்ளது.