Skip to main content

சீன - அமெரிக்கா வரிப்போர், எச்சரிக்கும் வால்மார்ட்!!!

Published on 21/09/2018 | Edited on 21/09/2018

அமெரிக்க நிறுவனமும் உலகின் மிகப்பெரிய சில்லறை வர்த்தகமுமான வால்மார்ட் நிறுவனம் அமெரிக்கா, பொருளாதார சரிவை சந்திக்கும் என்று அமெரிக்க வர்த்தகத்துறை அதிகாரிக்கு ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறது.

 

walmart

 

 

சில நாட்களுக்குமுன் அமெரிக்கா அரசு, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு புதிதாக 200 பில்லியன் அமெரிக்கா டாலர் மதிப்பிலான கூடுதல் வரியை விதித்துள்ளது. இந்த வரி விதிப்பு செப்டெம்பர் 24 முதல் அமலுக்கு வரும் என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த வரி விதிப்பால் அமெரிக்கா நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கா பொருளாதாரம் ஆகியவை பாதிக்கும். அதனால் வால்மார்ட் நிறுவனம் அமெரிக்கா வர்த்தகத் துறை அதிகாரிக்கு "சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு வரி விதிக்கும் முறையால் பொருளாதாரம் பாதிக்கும். குறிப்பாக அதிக அளவில் பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் என்ற முறையில் வால்மார்ட் நிறுவனம் அதிகம் பாதிக்கப்படும். மேலும் இதனால் பொருட்களின் விலை உயரும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் எங்கள் வர்த்தகம், எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் எங்கள் சப்ளயர்களும் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதால், இருநாடுகளும் இந்த வரி விதிப்புப் பிரச்சனையில் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வுகாண வேண்டும்" என்று ஒரு கடிதம் எழுதியுள்ளது.   

 

சார்ந்த செய்திகள்