Published on 14/09/2019 | Edited on 14/09/2019
அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா ஹம்சா பின்லேடன் தலைக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசுத் தொகை அறிவித்திருந்த நிலையில் தற்போது ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஒசாமா பின்லேடனை அடுத்து அல்கொய்தா தலைமை பொறுப்பை ஏற்றிருந்தார் ஹம்சா பின்லேடன் என்பதும், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துமாறு தொடர்ந்து 30 வயதான ஹம்சா பின்லேடன் ஆடியோ வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஊடங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியான நிலையில் டிரம்பும் அதனை உறுதிசெய்துள்ளார்.