மெக்சிகோவில் வாகனங்கள் அதிகம் செல்லும் நெரிசல் மிகுந்த சாலையை பெண் ஒருவர் கடக்கும்போது, தான் அணிந்திருந்த ஹை ஹீல்ஸினால் வழுக்கி விழுந்து, கார் மோதி விபத்துக்கு உள்ளாகினர்.
இச்சம்பவம் மேக்சிகோவில் சொனாரா மாகாணம் நெகோலஸ் நகரில் உள்ள ஒரு பாதுகாப்பு வீடியோ கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோவில், 22வயதுடைய மினெர்வா என்ற பெண் சாலையை போன் பேசிக்கொண்டே கடக்க முயற்சி செய்துள்ளார். மூன்று வழிச்சாலை என்பதால் முதல் இரண்டு வழியை கடக்க, மூன்றாவது வழியை கடக்கும்போது அவர் ஹை ஹீல்ஸ் அணிந்திருந்ததால் வழுக்கி கீழே விழ அப்போது அவ்வழியே வந்த காரின் பம்பரில் அவர் சிக்கிக்கொண்டார். பின்னர், அவர் மீட்கப்பட்டார்.
செஞ்சிலுவை சங்கத்தால் பக்கத்தில் உள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட மினெர்வா, நல்லபடியாக இருப்பதாகவும், அவருக்கு ஏற்பட்ட எலும்பு முறிவு மற்றும் சிராய்புகளுக்கு சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளனர். இவர் சாலையை கடந்து விபத்துக்குள்ளாகின இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில்தான் பாதசாரிகள் நடைபாதை இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.