Published on 29/10/2018 | Edited on 29/10/2018

ஊழல் வழக்கில் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது வங்கதேச சிறப்பு நீதிமன்றம். இவர் தனது ஆட்சிக் காலத்தின்போது அவரது பெயரில் இயங்கிவரும் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பல லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கடந்த வருடம் பிப்ரவரி மாதாமே இவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டதால் சிறையில்தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.