Skip to main content

பிரிட்டன் அரண்மனையில் தமிழர்களுக்கான விருது வழங்கும் விழா

Published on 08/12/2018 | Edited on 08/12/2018

 

eng

 

ஐரோப்பிய யூனியனின் 24 ஆம் உச்சி மாநாடு பிரிட்டனில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் பொழுது பிரிட்டனின் நேஷனல் ஹெல்த் சர்வீஸ் எனப்படும் மருத்துவத் துறையின் தேசிய நிர்வாகமும், உலக தமிழர் பேரவையும் இணைந்து விருது விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. அந்த விழாவில் மருத்துவ துறையில் சாதித்த தமிழக மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்தப் பிரம்மாண்ட விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் 14 -ம் தேதி  பிரிட்டனில் உள்ள ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மணையில்  நடைபெறுகிறது. இது பற்றி உலக தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த விழாவின் மூலம் மிகத் தனித்துவம் வாய்ந்த இந்தியா - பிரிட்டன் உறவினை  மேம்படுத்துவதுடன் பல புதிய வாய்ப்புகளும் உருவாகும் என்று நம்பிக்கை கொள்கிறோம்' என கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறந்த நடிகருக்கான விருது பெற்ற யாத்திசை நாயகன்

Published on 12/07/2023 | Edited on 12/07/2023

 

Yaathisai movie hero who won the best actor award

 

வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே.ஜெ. கணேஷ் தயாரிப்பில் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருந்த திரைப்படம் 'யாத்திசை'. ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராகப் போராடிய ஒரு சிறு தொல்குடியைப் பற்றிய கதைதான் 'யாத்திசை'. இப்படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியானது. 

 

படத்தைப் பார்த்த பலரும் படக்குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்தனர். படத்தின் காட்சிகள் பிரமாண்டமாகவும், படத்தில் பேசிய பழங்கால தமிழ் மொழி எனப் பல்வேறு அம்சங்கள் ரசிகர்களைக் கவர்ந்தது. இப்படத்தின் ஓடிடி ரிலீஸாக அமேசானில் வெளியாகி அங்கு ரசிகர்களால் பார்க்கப்பட்டுப் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

 

இந்நிலையில் சென்னையில் நடந்த சிசர்ஸ் மெஸ்மரைசிங் அவார்ட்ஸ் 2023 நிகழ்வில் சிறந்த நடிகருக்கான விருது யாத்திசையில் நடித்த சேயோனுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டிருக்கிறது. படக்குழுவினருக்கும் நடிகருக்கும் சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

 

Next Story

நாற்பது வயதில் ‘யூத் ஐகான்’ - விருது பெற்ற தனுஷ் நெகிழ்ச்சி!

Published on 21/04/2023 | Edited on 21/04/2023

 

'Youth Icon' - award-winner Dhanush at the age of forty

 

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் தனுஷ். கோலிவுட்  மட்டுமல்லாது பாலிவுட், ஹாலிவுட் என தனது நடிப்பிற்கான களத்தினை விரிவுபடுத்தி வருகிறார். சமீபத்தில் டோலிவுட்டிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். ஆரம்ப காலங்களில் உடல் ரீதியிலான பல்வேறு விமர்சனங்களை சந்தித்தவர் தனது பலகீனமாக சொல்லப்பட்டவை எல்லாவற்றையும் தனது பலமாக மாற்றிய கெட்டிக்காரர். விரைவில் கேப்டன் மில்லர் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. 

 

இந்நிலையில் சென்னையில், தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு கடந்த இரண்டு நாட்களாக நடந்து வந்தது. இந்நிகழ்வில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். இம்மாநாட்டில் யூத் ஐகான் விருது தனுஷ்க்கு வழங்கி கெளரவித்தது விழாக்குழு. இவ்விருதினை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வழங்கினார். 

 

இந்நிகழ்வில் தனுஷ் பேசியதாவது “நாற்பது வயதில் யூத் ஐ கான் விருது வாங்குவேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை; இன்னும் சாதிக்க நிறைய இருக்கிறது என்பதை நினைவுபடுத்துவதாக உள்ளது; எனது தோற்றத்தை முதலில் சினிமா ஏற்றுக்கொள்ளவில்லை. நான் நிறைய கனவு கண்டு இப்போது இங்கே நிற்கிறேன்” என்றார்.