Skip to main content

நோய்எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி - அமெரிக்கா அனுமதி!

Published on 14/08/2021 | Edited on 14/08/2021

 

corona vaccine

 

உலகம் முழுவதும் பல்வேறு வகையான கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்த தடுப்பூசிகள் பெரும்பாலும் இரண்டு டோஸ்களைக் கொண்டவையாக இருக்கின்றன. இந்தநிலையில், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களையும் கரோனா  தாக்குவதால், சில நாடுகள் மக்களுக்கு கரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸை செலுத்த திட்டமிட்டுள்ளன.

 

இந்நிலையில் அமெரிக்காவில், கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நோய்கள், மருத்துவ சிகிச்சைகள், உடல் உறுப்பு மாற்றம் செய்துகொண்டது போன்ற காரணங்களால், அமெரிக்க மக்கள் தொகையில் மூன்று சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. ஆனால், இவ்வாறு நோய் எதிர்ப்பு சக்தி குறைவான மக்களில் 44 சதவீதம் பேருக்கு, கரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்திக்கொண்ட பிறகும் கரோனா பாதிப்பு ஏற்படுவதுடன், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

 

இதனையடுத்து அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்த அனுமதியளித்துள்ளது. அடுத்த வாரத்திலிருந்து இந்த மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்