Published on 16/04/2022 | Edited on 16/04/2022
ஒவ்வொரு ஆண்டும் பிங்க் மூன் எனப்படும் பெருநிலவு ஒரு குறிப்பிட்ட நாளில் நிகழும். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பிங்க் மூன் நிகழ்வு இன்று நிகழ இருப்பதாக விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.
இன்றைக்கு பூமிக்கு மிக அருகில் வரும் நிலவு மிக வெளிச்சமாகவும், பெரியதாகவும் காட்சியளிக்கும். இந்த நிகழ்வுக்குப் பெரு நிலவு என்று பெயரிடப்பட்டுள்ளது. இதே சமயத்தில் வட அமெரிக்க நாட்டில் ஏப்ரல் மாதத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் நிலவு தோன்றுவதால் இந்த நிகழ்வை பிங்க் மூன் என்றும், சூப்பர் மூன் என்றும் அழைக்கின்றனர். இன்று நள்ளிரவு சில நிமிடங்கள் பிங்க் மூனை இந்தியாவில் பார்க்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.