கூகுள் நிறுவனம் (GOOGLE) பல விதங்களிலும் தொழில் வளர்ச்சிக்கும், கல்வி வளர்ச்சிக்கும் உதவி வருகிறது. அதில் ஒரு பகுதியாக புதியதாக தொழில் தொடங்கும் நபர்கள் தங்கள் நிறுவனம் எங்கு உள்ளது என்பதை எளிதாக மக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், அவர்கள் எளிதாக நிறுவனத்திற்கு வர ஏதுவாக கூகுள் நிறுவனத்தின் "மேப்பிள்" (GOOGLE MAPS) பதிவு செய்து கொள்வார்கள். அந்த கூகுள் மேப்பில் பதிவு செய்யும் போது நிறுவனத்தின் பெயர், முகவரி, நிறுவனத்தின் விவரங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும். இதன் மூலம் மக்கள் "கூகுளுக்கு"சென்று நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டால் போதும் நிறுவனத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டும் மேப்பாக "கூகுள் மேப்" பயன்படுகிறது. இந்த கூகுள் மேப்பை உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டில் மட்டும் கூகுள் மேப்பிலிருந்து 30 லட்சம் போலி நிறுவன முகவரிகளை நீக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. தொழில் நடத்துவதாக கூறி வாடிக்கையாளர்களை ஏமாற்றி வந்த போலியாக ஜோடிக்கப்பட்ட நிறுவனங்கள் இவை என்று கூகுள் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதே போல் 90% போலி நிறுவனங்களின் பெயர்களை பயனாளர்கள் பார்ப்பதற்கு முன்பே அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.