எகிப்தில் தீவிரவாதிகள் நடத்திய கண்ணி வெடிகுண்டு தாக்குதலில் 18 போலீசார் பலி
எகிப்தின் வடக்கு சினாய் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற பாதையில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த கண்ணி வெடி வெடித்துச் சிதறியது. இதில் போலீசாரின் வாகனங்கள் சிக்கி, தூக்கி எறியப்பட்டன. இந்தத் தாக்குதலில் 18 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.