உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, சீனா முதலிய நாடுகளில் கரோனாவின் தாக்கம் அதிகம் இருந்து வருகின்றது. பல லட்சக்கணக்கான மக்கள் இந்த தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனை தடுப்பதற்காக 20க்கும் மேற்பட்ட நாடுகள் கரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவின் கமலேயா நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியின் சோதனை நிறைவடைந்துள்ளன என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் மிக்கெல் முரைஷ்கோ அறிவிதுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும் போது, " கமலேயா நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவடைந்து விட்டன. அதை பதிவு செய்வதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றது. அக்டோபர் மாதம் தடுப்பூசிகளை மக்களுக்கு போட இருக்கின்றோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.