ஆன்லைன் வீடியோ கேமில் சிறுவர், சிறுவர்களிடம் ஆபாசமாகப் பேசியதாகவும், யூ-ட்யூப்பில் பெண்களை ஆபாசமாகத் திட்டியதாகவும், பப்ஜி மதன் என்கிற யூ- ட்யூபர் மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார்கள் குவிந்தன. இதையடுத்து, மதன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
காவல்துறையினர் தன்னை கைது செய்யக்கூடும் என்பதால் மதன் தலைமறைவாகியுள்ளார். இந்த நிலையில், சென்னை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல்துறையினர் மதனை கைது செய்வதற்காகத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், யூ-ட்யூபர் மதன் நடத்தும் யூ-ட்யூப் சேனலின் நிர்வாகி, அவரது மனைவி கிருத்திகா என்பதால் அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
யூ-ட்யூப்பில் ஆபாசமாகப் பேசி பப்ஜி மதன் கோடிக்கணக்கில் சம்பாதித்தது காவல்துறையினரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இதனிடையே, "பப்ஜி மதனால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாகப் புகார் அளிக்க முன்வர வேண்டும். புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்" என சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.