யூடியூபில் தேவையற்ற பதிவுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இது தொடர்பாக அரசிடம் என்னென்ன திட்டங்கள் உள்ளது? அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என அடுக்கடுக்கான கேள்விகளை தமிழக அரசுக்கு முன்வைத்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
முன்னாள் முதல்வர் கலைஞர், தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை விமர்சித்து வீடியோ வெளியிட்டதாக கைதுசெய்யப்பட்ட யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் ரத்து செய்யப்பட்ட வழக்கில் இந்த கருத்தை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. யூட்யூபில் வெடிகுண்டு தயாரிப்பது, கள்ளச்சாராயம் தயாரிப்பது எப்படி என்பது போன்ற வீடியோக்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் தவறுசெய்ய துணை புரிந்தால் சட்டப்படியும் யூடியூப்-பும் குற்றவாளியே. யூடியூபில் எதை வேண்டுமானாலும் ஒளிபரப்பலாமா?. இல்லை யூடியூப்பையே தடை செய்யலாமா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.