கடலூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஐ.பி.எஸ்., இருசக்கர வாகனத்தில் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என்று மாவட்டம் முழுவதும் உள்ள காவல்நிலையங்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி போலீசார் இருசக்கர வாகனத்தில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கம்போல 19.10.2018 தேதி விருத்தாசலம் காவல் நிலையம் தலைமை காவலர் திருமேனி, காவலர் திருமுருகன் ஆகியோர் விருத்தாச்சலம் பாலக்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிறுத்தத்தில் ஒரு மணி பர்ஸ் கிடந்ததை கண்டனர். அதனை எடுத்து பார்த்தபோது, ரூபாய் 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு அடையா அட்டை இருந்தது. அடையாள அட்டையில் கீதா, வயது 28, கணவர் பெயர வெங்கடேசன், சேலம் மெயின்ரோடு, விருத்தாசலம் மற்றும் அதில் செல்போன் என்னும் இருந்தது.
உடனே இரு காவலர்களும் அந்த மணி பர்சை விருத்தாச்சலம் உதவி காவல் கண்காணிப்பாளர் தீபாசத்தியனிடம் ஒப்படைத்தனர். மணி பர்சில் அடையாள அடையாள அட்டையில் இருந்த செல் நம்பரை தொடர்பு கொண்டு விசாரணை செய்தபோது, கைப்பையில் இருந்த பணத்தின் முழு விவரத்தை தெரிவித்தனர்.
அதன்பேரில் விருத்தாச்சலம் உதவி காவல் கண்காணிப்பாளர், மணிபர்ஸ்சை தவறவிட்டு கீதா மற்றும் அவரது கணவரை வரவழைத்து, அவர்களிடம் பணத்தை ஒப்படைத்தனர். இனி இதுபோன்று அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கினர். பணத்தைப் பெற்றுக்கொண்ட கீதா மற்றும் அவரது கணவர் காவல்துறைக்கு நன்றி தெரிவித்தனர்.
பணத்தை ஒப்படைந்த காவலர்களுக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.