
நாகப்பட்டினம் தாமரைக் குளத்தின் கரையோரம் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் தவறிவிழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை உண்டாக்கியிருக்கிறது.
நாகை நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது தாமரைக்குளம். அந்த குளத்தின் மேல்கரை பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். கூலி வேலை செய்துவரும் அருண்குமார், அன்று வேலையில்லாமல் வீட்டில் இருந்திருக்கிறார். இதனால், மதியத்திற்கு மேல் நாகை தாமரைக் குளத்தில் நண்பர்களோடு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். மழைநீரால் குளம் நிரம்பியிருந்தது, கரையோரம் மீன்பிடித்துக்கொண்டிருந்தவர் குளத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். அவரோடு மீன்பிடித்துக்கொண்டிருந்தவர்கள் கொடுத்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த நாகை தீயணைப்புப் படை வீரர்கள், நீண்ட நேரம் போராடி அருண்குமாரை சடலமாக மீட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வெளிப்பாளையம் போலீசார் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதோடு அருண்குமார் தவறி விழுந்தாரா, யாராவது தள்ளிவிட்டார்களா என்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.