![youth](http://image.nakkheeran.in/cdn/farfuture/6mhEXW70oSbYCnLddQrX2WIK45SRMOEf-0uDMrEfNgI/1533347626/sites/default/files/inline-images/IMG-20180213-WA0032.jpg)
புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஏழுமலை (23). மாட்டுவண்டி தொழிலாளியான இவர் இன்று அதிகாலை தனது நண்பர்களான ரவீந்திரன், ஜெகதீஷ் மற்றும் ரத்தினம் ஆகியோருடன் வீட்டின் வெளியில் உறங்கி கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம கும்பல் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர்.
பின்னர் ஏழுமலையை சரமாரியாக வெட்டி படுகொலை கொலை செய்துள்ளனர். இந்த தாக்குதலில் அங்கிருந்த ஏழுமலையின் நண்பர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் மர்ம கும்பல் தப்பியோடிய நிலையில், தகவலறிந்து வந்த வில்லியனூர் காவல்துறையினர் ஏழுமலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஏழுமலை மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உள்ளதாகவும், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், காவல்துறையின் மெத்தனபோக்கின் காரணமாகவே கொலை நடந்துள்ளதாக கூறி உறவினர்கள் காவல்நிலையம் எதிரே முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் காவல்நிலையம் எதிரே முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.
- சுந்தரபாண்டியன்