வேலூர் மாவட்டம் துருகம் பகுதியில் 23 வயது இளம்பெண்ணை சிறுத்தை கடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்துள்ளது துருகம் கிராமம். இந்த பகுதியில் வசித்து வரும் சிவலிங்கம் என்பவரின் மகள் அஞ்சலி (23) கடந்த புதன்கிழமை (18/12/2024)அஞ்சலியை சிறுத்தை கடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. வீட்டில் உடன்பிறந்த நான்கு சகோதரிகளுக்கும் திருமணமான நிலையில் பி.காம் பட்டதாரியான அஞ்சலி மேலே படிக்க வேண்டும் என்ற கனவில் படிப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டபடி விவசாயத்தில் தந்தைக்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக அஞ்சலிக்கும் விரைவில் திருமணம் செய்து வைக்க அவர்களுடைய பெற்றோர்கள் முடிவு செய்து முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சிறுத்தை தாக்கி பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சிறுமியின் உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுத கட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சம்பவத்தை நேரில் பார்த்த இளைஞர் ஒருவர் நடந்த சம்பவம் குறித்து கூறுகையில், 'நான் பைக்கில் பால் வாங்கிக் கொண்டு சென்ற பொழுது சிறுத்தை ஒன்று பெண்ணை இழுத்துக் கொண்டு சாலையை கடந்து புதருக்குள் ஓடியது. நான் போய் மக்களிடம் சொல்வதற்குள் சிறுத்தை பெண்ணை கொன்றுவிட்டது' என்றார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் துருகம் கிராமத்தில் முகாமிட்டுள்ள வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து, பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.