10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ஜகாடியா தொழிற்சாலை பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி. இவரது வீட்டு அருகே விஜய் பஸ்வான் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, விஜய் பஸ்வான் அந்த சிறுமியைக் கடத்திச் சென்று ஒரு புதருக்குள் இழுத்துச் சென்று வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும், அந்த சிறுமியின் பெண்ணுறுப்பில் இரும்பு கம்பியை வைத்து தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுமிக்கு, ரத்தம் வெளியானது. இதனை கண்ட விஜய் பஸ்வான், உடனே அங்கிருந்து தப்பிச் சென்றார். வலியால் துடித்து அழுதுக் கொண்டிருந்த சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு, அவரின் தாயார் தனது மகளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், விஜய் பஸ்வானுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும், விஜய் பஸ்வானும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையும் ஒரே தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. மேலும், இந்த சிறுமியை ஒரு மாதத்திற்கு முன்பு விஜய் பஸ்வான் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்பது தெரிந்தது.
இதனை தொடர்ந்து, விஜய் பஸ்வான் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் நிலைமை, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பெண்ணுறுப்பில் இரும்பு கம்பியை வைத்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.