Published on 31/07/2020 | Edited on 31/07/2020
![fd](http://image.nakkheeran.in/cdn/farfuture/uWHcUo4h2x0sv4sxSvSJOGprBIWjNZb66fbguLFwK3c/1596171124/sites/default/files/inline-images/dfg_22.jpg)
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி (80) உடல்நலக்குறைவால் காலமானார்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் பிறந்த இவர் எழுத்துலகில் பிரபலமானவர். 1968ம் ஆண்டு இவருடைய 'சாயாவனம்' என்ற புதினம் வெளிவந்ததில் இருந்து இவர் தமிழ் எழுத்துலகில் பிரபலமானார். இந்த புதினத்தை தேசிய புத்தக அறக்கட்டளை இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்திருந்தது. சில காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த இவர் தற்போது மரணமடைந்துள்ளார்.