Skip to main content

உலக மாற்றுத் திறனாளிகள் தினம்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Published on 03/12/2017 | Edited on 03/12/2017
உலக மாற்றுத் திறனாளிகள் தினம்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

“மாற்று திறனாளிகள் நலன்” என்பது ஒரு மக்கள் இயக்கமாகவே எடுத்துச் செல்லப்பட்டு “அனைவருக்கும் நாங்கள் சமம்” என்ற உணர்வு மாற்று திறனாளிகள் மனதில் மேலோங்க அனைவரும் பாடுபட வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
 
“டிசம்பர் மூன்று மாற்று திறனாளிகள் தினமாக கொண்டாடப்பட வேண்டும்” என்று 1992-ல் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்து, ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் மாற்று திறனாளிகள் தினம் இந்த ஆண்டு வெள்ளி விழா கண்டுள்ளது என்றாலும், மாற்று திறனாளிகள் தங்கள் வாழ்வின் முன்னேற்றப் பாதையில் விடிவெள்ளி முளைப்பதற்கு இன்னும் பல ஆக்கபூர்வமான திட்டங்கள் தேவைப்படுகிறது என்பதை உணர முடிகிறது.

மாற்று திறனாளிகள் அனைத்து துறைகளிலும் முன்னேறுவதற்கான திட்டங்களை மேலும் முழு வீச்சில் ஆட்சிப் பொறுப்பில் இருப்போர் செய்திட வேண்டும். “மாற்று திறனாளிகள் நலன்” என்பது ஒரு மக்கள் இயக்கமாகவே எடுத்துச் செல்லப்பட்டு “அனைவருக்கும் நாங்கள் சமம்” என்ற உணர்வு மாற்று திறனாளிகள் மனதில் மேலோங்க அனைவரும் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

“இந்த சமுதாயம் அனைவருக்கும் சமமானது. ஏன் எங்களுடையது” என்ற சிந்தனை மாற்றுத் திறனாளிகள் மனதில் சிறகடித்துப் பறக்கும் விதத்தில் அவர்களின் தன்மானம் காக்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் அளிக்கப் பெற்று நம்பிக்கையுடன் 2018-ஆம் ஆண்டில் அவர்கள் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்